2019 “தமிழகம் 38” – விருப்ப தொகுப்பு

வெற்றிகரமாக 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் வெளிவந்தாச்சு. கருத்து கணிப்புன்னு சொன்னா ஒண்ணு ஒரு டீம் வச்சு மக்களை சந்திச்சு கருத்து கேட்டு ஆய்வு செய்யணும். இல்லாட்டி, ஏதாவது அரசியல் கட்சி சொல்ற மாதிரி கற்பனை முடிவை சொல்லி இதான் “கருத்து கணிப்பு”ன்னு சொல்லி நாலு விவாதத்தை கிளறி விடணும். அப்போ அந்த கட்சிகிட்டேர்ந்து பணமோ, ஆதரவோ, வேற ஏதாவது உதவியோ வாங்கிக்கலாம்.

அந்த மாதிரி ரிஸ்க் எடுக்காம, மனசுல இருக்கற ஆசையையும் பத்திரிக்கைகளில் வர்ற கணிப்புகளையும் மிக்ஸ் பண்ணி இப்படி ரிசல்ட் வந்தா நல்லா இருக்குமேன்னு சொல்றது “விருப்ப தொகுப்பு”. அப்படி, 2019 தேர்தலில் தமிழகத்தின் 38 தொகுதிகளுக்கான (வேலூரில் தேர்தல் நடைபெறாததால் 39 மைனஸ் 1) எனது “விருப்ப தொகுப்பு” இதோ…

கட்சி வெற்றி “சீட்”கள் கட்சி வெற்றி “சீட்”கள்
திமுக 12 அதிமுக 8
காங். 4 பாஜக 4
விசிக 1 பாமக 3
கம்யூ. 1 தேமுதிக 1
மதிமுக 1 தமாகா 1
கொமுக 1 புதிய தமிழகம் 1
திமுக+ 20 அதிமுக+ 18

மேல சொன்ன “விருப்ப தொகுப்பு”க்கான என் லாஜிக் இங்கே –
கலைஞர், ஜெ. மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் தலைமைக்கு ஒரு வெற்றிடம் இருக்குன்னு தெளிவா சொல்லணும். இப்போ இருக்கற ரெண்டு பெரிய கூட்டணியுமே கிட்டத்தட்ட சரிசமமா ஜெயிச்சா “நீங்க ரெண்டு பேருமே ஒரே அளவுலதான் இருக்கீங்க, வெற்றிடத்தை நிரப்பற அளவுக்கு வளரல” ன்னு சொல்ற மாதிரி இருக்கும்.

வர்ற மே 23 கவுண்டிங் முடிஞ்ச பிறகு, நான் மேல சொன்ன “விருப்ப தொகுப்பு”ம் இறுதி ரிசல்ட்டும் எவ்வளவு தூரம் ஒத்துபோயிருக்குன்னு இதே பதிவில் அப்டேட் செய்கிறேன்.

மே 23 தேர்தல் முடிவு வந்தபின் எழுதியது –

நான் கூட “விருப்பம் vs மக்கள் தீர்ப்பு“ன்னு பெரிய அட்டவணை தயாரிக்கணுமோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். மக்கள் அவ்வளவு வேலை கொடுக்கல. அசால்ட்டா திமுக கூட்டணிக்கு 37 சீட், அதிமுகவுக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு கொடுத்திட்டாங்க. இதுக்கு மேல விருப்பமாவது கணிப்பாவது.. அடுத்த வேலைய பார்க்க வேண்டியதுதான் 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!