சோஷியல் மீடியாவில் 90களில் பிறந்தவர்கள்
சமூக வலைத்தளங்களில் இஷ்டத்திற்கு கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது, வயசுக்கான மரியாதை கொடுக்காமல் எழுதுவது/பேசுவது என இருக்கும் பெரும்பாலான profilesகளிடையே ஒரு pattern பார்த்தேன். அவர்களில் நிறைய பேர் “Born 1993”, “Born 1994” என இருக்கிறார்கள். அதாவது 1990-2000 காலகட்டத்தில் பிறந்தவர்கள்.
பொதுவாக அடுத்தடுத்த காலகட்டங்களில் பிறந்தவர்களுக்கிடையே வித்தியாசங்கள் படிப்படியாக இருக்கும். ஆனால், 1990க்கு முன்பு பிறந்தவர்களுக்கும் 1990-2000 பிறந்தவர்களுக்கும் வித்தியாசங்கள் பன்மடங்கு இருக்கிறது. என்னென்ன காரணங்கள் இருக்கமுடியும் என என் சிற்றறிவுக்கு எட்டிய விஷயங்கள் இங்கே ஒரு பதிவாக –
1991ல் இந்தியாவில் உலகமயமாக்கல் வந்து, சந்தைப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி, பல நடுத்தர குடும்பங்களின் பொருளாதார சூழல் மேம்பட்ட காலகட்டம் 1995 – 2010 என சொல்லலாம். அதன் விளைவாக, பொதுவாக நெருக்கிபிடித்து செலவு செய்யும் குடும்பங்கள் தாராளமாக செலவு செய்ய ஆரம்பித்தார்கள். அதனால் 1990-2000ல் பிறந்த குழந்தைகளுக்கு கேட்டதெல்லாம் கிடைப்பது எளிதானது.
1990-2000ல் பிறந்தவர்கள், தோராயமாக 2005-2010 காலகட்டத்தில் 10வது, 12வது என படித்திருப்பார்கள். அந்த 2005-10 காலகட்டத்தில் நிகழ்ந்த சில சமூகமாற்றங்களை எண்ணிப் பாருங்கள் –
- டாஸ்மாக் கடைகள் பல்கிப்பெருகி மது கிடைப்பது எளிதானது; 15 வயது பையன் மது பாட்டிலை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டு நடந்து போகும் காட்சிகள் சர்வ சாதாரணமானது.
- மது குடிப்பது அன்றாட கலாச்சாரம், தப்பில்லை என்பது போல் பல திரைப்படங்கள் மறைமுகமாக promote செய்தன. திரையில் வெற்றிகரமாக ஓடி, இன்றும் நகைச்சுவைக்காக போற்றப்படும் “சிவா மனசுல சக்தி” படம் ஒரு ஆகச்சிறந்த உதாரணம்.
- Cuss Words என சொல்லப்படும் கெட்ட வார்த்தைகளின் பயன்பாடு திரைப்படங்களில் அதிகரித்து, அப்படி பேசுவதில் heroism புகுத்திய படங்கள் வெளிவந்தன. என்னென்ன படங்கள் என லிஸ்ட் போட்டால் அதிலும் ஒரு pattern வரும்; அது இந்த பதிவின் நோக்கத்தை மாற்றிவிடும் என்பதால் அந்த லிஸ்ட்டை இங்கே தவிர்க்கிறேன்.
- இன்ஜினியரிங், மெடிக்கல் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இளைஞர்களுக்கு தேர்வுக்கான பளு மட்டுமல்ல, போட்டிகளுக்கு தயார்படுத்திக்கொள்ளும் மனநிலையும் குறையத் தொடங்கியது.
- குறைந்த விலையில் மொபைல் போன் கிடைக்க தொடங்கியது, மாதாந்திர மொபைல் கட்டணமும் குறையத் தொடங்கியது.
- வேலைக்கு போய் சம்பாதித்தால் மட்டுமே கிடைக்கும் என்கிற நுகர்பொருட்கள் கூட (டிவி ஒரு உதாரணம்) அரசாங்கத்திடமிருந்து இலவசமாக கிடைக்கும் என்ற நிலை உருவானது. உளவியல் ரீதியாக இது உழைக்கும் முனைப்பை மட்டுப்படுத்தியது.
- ஜனநாயக கடமையான ஓட்டை வாங்கலாம்/விற்கலாம் என்கிற கலாச்சாரம் விருட்சமானது. ஊழல், முறைகேடுகள் எல்லாம் “இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா” என்கிற வகையில் எளிதாக ஏற்றுக்கொள்ளும் “பக்குவ” நிலைக்கு உயர்ந்தன.
சுருக்கமாக சொல்லவேண்டுமெனில், 1990-2000ல் பிறந்த பிள்ளைகளுக்கு “கடமை” என்கிற நிலையிலான விஷயங்கள் “உரிமை” என்கிற வகையில் மாறிப்போனது. அவர்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. அவர்களது பெற்றோர்களும் அந்த காலகட்டத்தின் திடீர் பொருளாதார ஏற்றத்தின் மயக்கத்தில் மூழ்கி, தங்கள் பிள்ளைகளையும் மூழ்கடித்துவிட்டார்கள்.
இப்போது கவனிக்க வேண்டிய (அல்லது கவலை கொள்ளவேண்டிய) விஷயம் என்ன தெரியுமா – 1990-2000ல் பிறந்த பெரும்பாலோர் இந்த 2021-2030 காலகட்டத்தில்தான் பெற்றோர் ஆவார்கள். அவர்களது பிள்ளைகளை எப்படிப்பட்ட தன்மையுடன் வளர்ப்பார்கள்?!
Excellant analysis.
This is what I was always feeling.
தமிழ் நாட்டில் இந்த மனப்பான்மை சற்று தூக்கலாக இருப்பதே இதற்கு ஒரு அத்தாட்சி. ஒரு தரமான போட்டி திறமையை வளர்த்துகொள்ள உதவும் என்ற நிலை மாறி , அப்படிப்பட்ட திறமை எமக்கு தேவை இல்லை என்று சொல்வதுதான் சமூக நீதி என்ற நிலை ஏற்பட்டிருப்பது தமிழ் நாட்டின் எதிர் காலத்துக்கு நல்லதே அல்ல. அது மட்டுமின்றி எதோ சில சாதியினரிடம்தான் திறமை இருப்பதாக நினைத்து அவர்களை தடுப்பது எனது மற்ற சாதியனரின் திறமைக்கு இழுக்காகிவிடும்.
திறமை அற்றவர்களும், திறமையை வளர்த்துக்கொள்ள ஆர்வம் இல்லாதவர்களும் நாட்டாமை செயயும் போது நிலைமை இப்படி ஆனதில் வியப்பு ஏதும் இல்லை.