“Plip Plip”க்கு தேவை “Clip Clip”
YouTubeல் “Plip Plip” என்றொரு சேனல். அந்த சேனலில் வரும் வீடியோக்களில் பேசும் இருவர் ஆபாசமாகவும் சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவார்கள். சிறப்பு என்னவென்றால், சமீபத்தில் முதலமைச்சரை கோட்டையில் சந்தித்து பாராட்டு பெற்ற YouTube குழுவினரில் இவர்களும் உண்டு. இவர்களது சேனலை ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் follow செய்வதாகவும் தகவல்.
முதலமைச்சரை சந்திக்கும் அளவிற்கு செல்வாக்கு இருப்பதாலோ என்னவோ, சில நாட்களுக்கு முன்பு “Annaatthe Roast” என்றொரு வீடியோவை படு ஆபாசமான வகையில் வெளியிட்டு இருக்கிறார்கள். விமர்சனம் என்ற பெயரில் “அண்ணன் – தங்கை” உறவைக்கூட கொச்சைப்படுத்தும் வகையிலான பேச்சு. “கருத்து சுதந்திரம்” என்ற பெயரில் இதனை அனுமதிப்பது சமூகத்திற்கு கேடு விளைவிக்கும். ஆபாச பேச்சுக்காக YouTuber மதனை கைது செய்து சிறையில் தள்ளிய அரசாங்கம் இவர்களையும் பாரபட்சமின்றி உள்ளே தள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Plip Plip ஆதரவாளர்கள் சொல்லும் கருத்துகள் –
- Roast என்பது உலகளாவிய கலாச்சாரம். கண்டபடி ஒரு படத்தை துவைப்பது சர்வசாதாரணம். நடிகரை ஏதும் சொல்லவில்லை, அவரது கதாபாத்திரத்தைத்தான் சொல்கிறார்கள். இந்த conceptஐ உள்வாங்காமல் Roast செய்பவர்களை திட்டுகிறார்கள். அப்படி திட்டுபவர்கள் பிற்போக்குவாதிகள்.
- கெட்ட வார்த்தை பேசுவது என்பது நம் கலாச்சாரத்தில் ஊறிப்போன விஷயம். அதை பொதுவெளியில் பேசுவதில் தவறில்லை. 18+ சேனல் என சொல்லியே சேனல் நடத்துகிறார்கள். பின் என்ன பிரச்சினை? நீங்கள் பார்க்காதீர்கள்.
உண்மையில், “அண்ணாத்த Roast”ஐ எதிர்த்த பெரும்பாலோர் மேலே சொன்ன கருத்துகளை உள்வாங்காமல் இல்லை. ஆனால், பிரச்சினை என்னவென்றால், இவர்களே சொல்கிற “Roast” definitionக்கு எதிராகவே Plip Plipன் Roast இருந்ததுதான்.
- கதாபாத்திரத்தைத்தான் சொல்கிறார்கள் என்றால் “கிழட்டு” என்ற பதத்தை (ஒரு கெட்டவார்த்தையோடு சேர்த்து) Roastல் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன? படத்தின் கதைப்படி, காளையனுக்கு 40 வயசுக்கு மேல் இருக்காது. டீன் ஏஜ் பருவத்தில் (15-18 வயது சொல்லலாம்) உள்ள காளையனுக்கு தங்கை பிறக்கிறாள். அவள் 3 வருட கல்லூரி படிப்பை முடிக்கும்போது, காளையனுக்கு 36-39 வயசுதான் இருக்க முடியும். பின் ஏன் “கிழட்டு”, “Alzheimer” reference எல்லாம் Roastல் சொல்ல வேண்டும்?
- கதையின்படி, அதிக வயசு வித்தியாசத்தில் உள்ள தங்கையை காளையன் ஒரு அப்பாவைப் போல், அம்மாவைப் போல் வளர்க்கிறான். அதற்கான காட்சிகள் படம் நெடுகிலும் இருக்கின்றன. பாடல் வரிகளிலும் ஆங்காங்கே இது பிரதிபலிக்கிறது. அப்படி காட்டப்படும் உறவை incest வகையாக சித்தரிப்பது எந்த வகையில் சரி?
- Stalkingக்கு அர்த்தம் தெரியுமா? அண்ணன் தன் தங்கைக்கு பாதுகாப்பான நிழலாக தொடர்வதை Stalking என பேசுவது எவ்வளவு ஆபாசமானது, அருவருக்கத்தக்கது?!
மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்தும் படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் அடிப்படையாக வைத்து கேட்கப்பட்டுள்ளவையே. பகுத்தறிவு, நவீனம், முற்போக்குத்தனம், சமூகநீதி, பெண் விடுதலை என பேசும் Plip Plip ஆதரவாளர்களிடம் கொஞ்சமேனும் தார்மீக அறம் இருந்தால், அவர்கள் இந்த கேள்விகளுக்கு மழுப்பல் இல்லாத பதில்கள் தரவேண்டும். அப்படி இல்லையேல் Roast என்ற பெயரில் ரஜினி மீது வன்மம் கக்கப்பட்டது என்பதையாவது தைரியமாக ஒப்புக்கொள்ள வேண்டும். இரண்டும் இல்லாமல் “கெட்ட வார்த்தை = மண்ணின் கலாச்சாரம்”, “Roast = சமூகநீதி” என escape ஆவது அக்மார்க் கோழைத்தனம்.