மாண்பற்ற விகடன் அவர்களுக்கு ஒரு கடிதம்

ரஜினி மீதான வன்மத்தை லிட்டர் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் விகடன், அடுத்த பாட்டில் விஷத்தை (https://www.vikatan.com/government-and-politics/politics/an-open-letter-to-rajinikanth-on-behalf-of-the-people-of-tamilnadu) கொட்டியிருக்கிறது. இம்முறை நிறைய இனிப்பு சேர்த்திருக்கிறார்கள் – அது விஷ பாட்டில் என தெரியாமல் இருப்பதற்கு.

1996 தேர்தலில் ரஜினியின் பங்களிப்பை இப்பொழுது எவ்வளவு மலிவாக எழுதியிருக்கிறீர்கள்? 1995, 1996ல் வெளிவந்த ஜூனியர் விகடன் இதழ்கள் உங்கள் பெட்டகத்தில் இல்லையா? அல்லது இந்த கட்டுரை எழுதியவர் அந்த இதழ்களில் வந்த ரஜினி சார்ந்த கட்டுரைகளை படித்ததில்லையா? படித்துப் பார்த்துவிட்டு இங்கே வந்து திருத்தம் செய்யுங்கள் (தப்பித்தவறி பத்திரிக்கை தர்மத்தின் மிச்சங்கள் ஏதேனும் ஒட்டியிருந்தால்).

“பல வருடங்களாகக் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவர் பேசிவந்தாலும்,…” என்றொரு வரி. கட்சி ஆரம்பிப்பது குறித்து டிசம்பர் 2017க்கு முன் எப்பொழுது பேசிவந்தார்? “கோமா”ளி விகடன் எம்மை ஏமாளி மக்கள் என்றே நினைத்தீரோ?

மே 2017ல் ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமா என எல்லோரை பற்றியும் ரஜினி நல்லவிதமாக பேசினார். இந்த சமீப நிகழ்வை சொல்லலாமே? அதை விட்டுவிட்டு எப்பொழுதோ பேசிய நாகராஜ், தாக்கரே எல்லாம் இப்பொழுது ஏன்? [அவர்கள் இருவரைப் பற்றி ரஜினி பேசியது, அவர்கள் அரசியல் நிலைப்பாடு சார்ந்தது அல்ல என்பது விகடனுக்கு நன்றாகவே தெரியும்].

தூத்துக்குடியில் ஒரே ஒருத்தர்தான் ரஜினியை பார்த்து யார் என்று கேட்டார் (அவரும் இரண்டு நாட்களில் மன்னிப்பு கேட்டது வேறு விஷயம்). மற்றவர் அனைவரும் அவரை அன்புடனே வரவேற்றதை பார்க்கவில்லையா, விகடன்? விகடன் கண்களுக்கு அறுவை சிகிச்சை தேவை போலிருக்கிறது.

முரண், குழப்பம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாம். இங்கே எத்தனை பார்வையாளர்கள் கட்சி சாராத நடுநிலையாளர்கள்? நடுநிலையற்ற பார்வையாளர்களுக்கு ரஜினியின் நிலைப்பாடுகள் குழப்பம் தருவது இயல்புதானே.

மக்களின் விருப்பத்துக்கு மாறாக முடிவெடுக்காதீர்கள் என வேண்டுகோள் வேறு. மக்களின் விருப்பத்தை விட, மக்களின் நன்மையை பார்ப்பவனே நல்ல தலைவன் என்பது பத்திரிக்கைத் துறையில் தலைமைப் பண்பை தொலைத்துவிட்ட விகடனுக்கு மறந்து போனது ஆச்சரியமில்லை.

ரஜினி, தமிழக மக்களுக்காகத்தான் அரசியலுக்கு வருகிறார். மக்கள் நன்மைதான் அவர் அரசியலின் மையப்பொருள் என்பதை காத்திருந்து பாருங்கள், ஆனந்த வஞ்சக விகடனே.


பின் குறிப்பு: 6+ மாதங்களுக்கு முன் விகடன் ரஜினி பற்றி எழுதிய ஒரு வன்மக் கட்டுரைக்கு, அப்பொழுது எழுதிய பதில் பதிவு இங்கே (விகடனின் நினைவுக்கு) –https://www.sivathoughts.in/vikatan-vs-rajini/

Comments
  1. 5 years ago
    • 5 years ago
  2. 5 years ago
    • 5 years ago
  3. 5 years ago
    • 5 years ago
    • 5 years ago
  4. 5 years ago
    • 5 years ago
  5. 5 years ago
  6. 5 years ago
  7. 5 years ago
  8. 5 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!