யாரோ யார் யாரோ…
தலையாய் இருந்து (அம்)மாதவம் செய்து
இலை பிரித்து வலம் வந்தது
துணையாய் போகத்தானா?
கொல்லையே போதுமென்றால்
(மனங்)கொள்ளையாகாதே – ஆயினும்
“மறையேன் நெறியே” என்றதே
(தா)மரை
ஆக்கும் பொழுதுகள் போக்கும் பொழுதுகளாகி
“உடையும்” செய்திகளால் உடைந்திருக்கிறான்
விரல்மைகொண்டான்..
அடுத்தொரு மையிடுவதற்குள்
தனித்தொரு தலை வருமா?
.
.
.
நம்பிக்கையே வாழ்க்கை…
பின் குறிப்பு:
(1) மேற்சொன்னவை அரசியல் சார்ந்தவை என்று நினைப்பவர்களுக்கு – முதல் மூன்று வரிகள் பாலசந்தர் பட (கம்பீர) நாயகியை மையம் கொண்டவை; அடுத்த நான்கு வரிகள் “ஒரு வழிப்பாதையை” மட்டுமே நம்பி ஓட்டும் ஆட்டோக்காரர்களை மையம் கொண்டவை; இறுதி ஆறு வரிகள் தொலைக்காட்சி சேனல்களில் வரும் மெகா தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களால் ஈர்க்கப்பட்டிருக்கும் (அ) பாதிக்கப்பட்டிருக்கும் பார்வையாளர்களை மையம் கொண்டவை.
(2) மேற்கண்ட சொற்களாக்கத்திற்கு (உலக) நாயகனின் சுட்டுரைகள் காரணம் என்று நீங்கள் முடிவு செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.