தலை(கீழ்)வா??

சின்ன வயசுல “நான் முதலமைச்சரானால்”, “நான் பிரதமரானால்” ன்னு பள்ளிக்கூடத்துல கட்டுரை எழுதின ஞாபகம் இருக்கு. அப்படி ஒரு “நீங்கள் முதலமைச்சரானால்” (செட்டப்?!) கேள்விக்கு நடிகர் விஜய் ஒரு குட்டி கதை சொல்லி பதில் சொன்னார் [அக்டோபர் 2, 2018 – “சர்கார்” திரைப்பட இசை வெளியீட்டு விழா]. அந்த கதையோட சாரம்சம் – “தலைவன் சரியா இருந்தா அவன் கீழிருக்கும் (அதிகார) படையும் அவன் ஆட்சி செய்யும் மக்களும் சரியாக இருப்பார்கள்”.

மேற்சொன்ன சீனை அப்படியே கட் பண்ணிட்டு நவம்பர் 8, 2018க்கு வர்றோம். தீபாவளிக்கு ரிலீஸ் ஆன “சர்கார்” படத்தில் இருந்த சில காட்சிகள் ஆளும் அதிமுகவினரை உசுப்பேத்திவிட, அவர்கள் பல திரையரங்குகளின் வாசலில் போராட்டம் நடத்துகின்றனர். விஜய் ரசிகர் மன்றங்கள் வைத்த பேனர்களை அதிமுகவினர் கிழிக்கின்றனர். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் ஆங்காங்கே அதிமுக கட்சி சார்ந்த பேனர்களை கிழிக்கின்றனர். சில ரசிகர்கள் மீது வழக்கு பதிவும் நடக்கிறது. அந்த படத்தில், அரசு இலவசமாக கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை தீயிலிட்டு எரிப்பது போல் விஜய் ரசிகர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் (அரசு இலவசமாய் கொடுத்த) மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் போன்ற பொருட்களை உடைக்கின்றனர், எரிக்கின்றனர். 24 மணி நேரத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட காட்சிகளை நீக்கிவிட, பிரச்சினை ஓய்கிறது.

அக். 2 காட்சியை பார்த்த பார்வையாளர்கள், நவ. 8 காட்சியில் “தலைவன்” மாஸா களத்தில் இறங்குவார்னு எதிர்பார்த்திருப்பாங்க. தன்னுடைய ரசிகர்களுக்கு ஆதரவாகவும், அதே சமயம் சமூக பொறுப்போட “மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப்-லாம் நிஜத்தில் உடைப்பது சரியல்ல” ன்னு அவங்களுக்கு அறிவுரையாகவும் நடிகர் விஜய் அறிக்கை விடுவார்னு எதிர்பார்த்திருந்த ஆடியன்ஸ் anti-climax னால ஏமாந்தது நிஜம். ஒரு வேளை ஒன்றிரண்டு நாட்களில் அறிக்கை விடுவார் அல்லது பேட்டி குடுப்பார் ன்னு பார்த்தா, அவர் “சர்கார் சக்ஸஸ் பார்ட்டி”ன்னு கேக் வெட்டி கொண்டாடிட்டு இருக்கார். பத்தும் பத்தாததுக்கு அந்த கேக்ல “மிக்ஸி, கிரைண்டர்” உருவ க்ரீம் வேற.

தன்னை நம்பியிருக்கும் ரசிகர் கூட்டத்துக்கு ஆதரவாக ஒன்றும் செய்யவில்லை. தன் ரசிகர்களை அமைதி காக்க வைக்கவும் எதுவும் செய்யவில்லை. தன் ரசிகர்கள் (அரசு தந்த) இலவச பொருட்களை உடைக்கும்/எரிக்கும் காட்சிகள் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது என்பதை உணர்ந்ததாகவும் தெரியவில்லை. இது என்ன விதமான தலைமை பண்பு? இப்படிப்பட்ட “தலைமை பண்பு” கொண்டவர், கற்பனைக்கு கூட “நான் முதலமைச்சரானால்”ன்னு யோசிக்காம இருக்கறது தமிழ்நாட்டுக்கு நல்லது.

பின் குறிப்புகள்:

  • இது ஒரு மேட்டர்னு இதுக்கு ஏன் ஒரு பதிவுன்னு யோசிக்கறவங்களுக்கு – இன்னும் 6-7 வருஷத்துல கண்டிப்பா விஜய் அரசியலுக்கு வருவார். அப்போ தமிழ் கூறும் நல்லுலகு “தலைவன் வந்தாச்சு”ன்னு தூக்கி வச்சு கொண்டாடுறதுக்கு முன்னாடி மேற்சொன்ன “தலைமை பண்பு” விஷயத்தை சரிபார்த்துக்க உதவுங்கற நம்பிக்கையில் இன்றைய நிகழ்வை பதிய வைக்கும் “வரலாற்று” பதிவு இது.

 

  • இப்போ இருக்கற ட்ரெண்ட் என்னன்னா – சினிமாவையும் அரசியலையும் சேர்த்து பேசினாலே “ரஜினி இதுல யோக்கியமா?” ன்னு கேட்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே பதில் சொல்லிடறேன் – 2004ம் வருடம் பாமகவுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் பிரச்சினை வந்தப்போ, ரசிகர்களுக்காக தன் அரசியல் இமேஜ் பத்தி கவலைப்படாமல் வாய்ஸ் குடுத்தவர் ரஜினி. அது பற்றி 2004 ஜூன் குமுதம் பேட்டில ரஜினியே சொல்லியிருந்தது இங்கே…

Comments
  1. 6 years ago
  2. 6 years ago

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!