(இடைத்) தேர்தல் ஆருடம் 2017 – ஆர்.கே.நகர்

பரபரப்பான ஆர்.கே.நகர் தேர்தல் மீண்டும் நிறுத்தப்படுமோ என்ற சந்தேகத்துடன் அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்வதாக சொல்கிறார்கள். இந்த பரபரப்பில் பங்கு கொள்ளும் வகையில் (?), தேர்தல் நடந்தால் யார் வெல்லக்கூடும் என்று ஆருடம் சொல்லலாமே என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.

 

எச்சரிக்கை – இந்த ஆருடம் களத்தில் ஆய்வு செய்து சொல்லப்படுவதல்ல, கடந்த காலத்தில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தல்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் தற்போதைய சில நிகழ்வுகள் மீதான மேம்போக்கான கருத்துகளை கொண்டு சொல்லப்படுவது. இந்த ஆருடத்திற்கு எந்த வாரண்ட்டியோ/கியாரண்டியோ கிடையாது.
கடந்த காலத்தில் நடந்த ஆர்.கே.நகர் தேர்தல்களின் புள்ளிவிவரங்கள் –

 

 

இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சில சேதிகள் –

 

  • 1989 தேர்தலில் பிரிந்திருந்த அதிமுக அணிகள் பெற்ற வாக்குகள் – ஜெ அணி 25%, ஜா அணி 17% (ஆக மொத்தம் – 42%). அதிமுக வாக்குகளிடையே பிரித்தால் 60% அதிமுக வோட்டுகள் ஜெ அணிக்கும், 40% வோட்டுகள் ஜா அணிக்கும் கிடைத்தன.
  • 2001 முதல் நடந்த தேர்தல்களில் அதிமுக குறைந்தபட்சம் 50% வாக்குகளேனும் பெற்றிருக்கிறது; 2006 ஆட்சி மாற்ற தேர்தலில் மட்டும்தான் 50%, மற்றபடி 55% க்கு மேல்தான். ஆக, இந்த தொகுதியின் அதிமுக அபிமானம் அவ்வளவு எளிதாக கரையக்கூடியதல்ல.
  • 1996 தேர்தல் தவிர “அதிமுக எதிர்ப்பு” ஓட்டுக்களை திமுக பெரிதாக அறுவடை செய்யவில்லை. உதாரணமாக, 2006ல் அதிமுக 8% வோட்டுகளை இழந்திருந்தாலும், திமுக அணி வேட்பாளர் 3% வோட்டுகள் மட்டுமே அதிகம் பெற்றிருக்கிறார்.
  • 2011 பொது தேர்தலை ஒப்பிடும்போது 2016ல் அதிமுக 3% வாக்குகளும், திமுக 4% வாக்குகளும் இழந்திருக்கின்றன
  • இத்தனை தேர்தல்களிலும் அதிகபட்சமாக வாக்களிப்பு நிகழ்ந்தது 2015 இடைதேர்தலில்தான் – அதுவும் 74% மட்டுமே. ஆக இந்த முறை பெரும் மாற்றம் இருக்கும் என்று தோன்றவில்லை (அதிகபட்சம் 80% இருக்கலாம்).

 

சரி, உன் ஆருடம் என்ன என்று கேட்கிறீர்களா?

 

  1. 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் 2% வாக்குகளும், பாமக வேட்பாளர் 2% வாக்குகளும் பெற்றிருந்தனர். அவை இப்போது முறையே திமுகவுக்கும், அதிமுகவுக்கும் போயிவிடும் (அதெப்படி பாமக வோட்டுகள் அதிமுகவிற்கு போகும் என்றால் – விடுதலை சிறுத்தைகள் ஆதரிக்கும் அணிக்கு பாமக சார்ந்தவர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்ற வழக்கமான லாஜிக்தான்)
  2. இப்போது இருக்கக்கூடிய “அதிமுக எதிர்ப்பு” மனநிலையை திமுக பெரும் அறுவடை செய்துவிடாது என்றே தோன்றுகிறது. அதிகபட்சம், 2016ல் இழந்த 4% வாக்குகளை மீட்கக்கூடும்.

 

ஆக, மேற்சொன்ன (1), (2) வைத்து பார்த்தால் திமுக 39% (33 + 2 + 4) வாக்குகள் பெறும். அதிமுக (இரண்டு அணிகளும் சேர்த்து) 54% (56 +2 – 4) வாக்குகள் பெறும். 1989ல் அதிமுக வாக்காளர்கள் 60% ஜெ அணிக்கும் 40% ஜா அணிக்கும் வாக்களித்துள்ளனர். அதுபோன்று இல்லாமல் இப்போது  75% ஒரு அணிக்கும், 25% மற்றொரு அணிக்கும் வாக்களித்தால்,  75% (அதாவது, மொத்த வாக்குகளில் 40%) தக்க வைக்கும் வேட்பாளர் எம்.எல்.ஏ ஆவார். உதாரணமாக, கீழ்கண்ட ஊக அட்டவணையை பார்ப்போம்.

 

பொதுவாக நிலவும் ஆளுங்கட்சி அதிருப்தி, பிரச்சார உத்திகள் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளை வைத்து பார்க்கும் போது 75% அதிமுக வாக்காளர்களின் வாக்குகளை தினகரன் பெற்றுவிடுவார் என்று தோன்றுகிறது. அந்த வகையில், என் ஆருடம் இதுதான் – முதலிடம்: தினகரன், இரண்டாமிடம்: மருதுகணேஷ். தேர்தல் நடந்தால், வரும் 24ந் தேதி இந்த ஆருடம் (மேற்சொன்ன புள்ளிவிவரங்களோடு) பலிக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!